ஹஜ்ஜுப் பெருநாள் குர்பானி விபரம்

வெளிநாடு மற்றும் ஹாஜிகளின் குர்பானி குறித்த விபரங்களை அறியஇங்கே கிளிக் செய்யவும்

உள்ளுர் குர்பானி குறித்த விபரங்களை அறியஇங்கே கிளிக் செய்யவும்

முகப்பு

      காயல்பட்டணம் அல்குத்புல் மதீன் முஹம்மது அபூபக்கர் மிஸ்கீன் ஸாஹிப் பெரிய  ஷெய்குனா(றளி) அவர்கள் ஹிஜ்ரி 1281ல் திருமக்கா சென்று ஹஜ்ஜுக் கடமைகளை முடித்தார்கள்.ஷாதுலிய்யா தரீக்காவின் 21வது கலீஃபா அல் குத்புல் உஜுத் அஷ்ஷெய்கு முஹம்மதுல் ஃபாஸி இமாம்(றளி) அவர்கள் ஹறம் ஷரீஃபிலேயே ஷாதுலிய்யா திக்ர் ஹல்கா நடத்தி வந்தார்கள். அந்த திக்ர் மஜ்லிஸில் பெரிய ஷெய்குனா அவர்களும் மற்றும் நமதூர்வாசிகளும் கலந்து கொண்டார்கள். முடிவில் அனைவரும் பைஅத் எடுத்துக்கொண்டார்கள். பெரிய ஷெய்குனா அவர்களின் அறிவுத்திறமையையும் பயபக்தியையும் பார்த்த இமாம் ஃபாஸி நாயகம்(றளி) அவர்கள் பெரிய ஷெய்குனா அவர்களுக்கு பைஅத்தும் கொடுத்து ஷாதுலிய்யா தரீக்காவின் கலீஃபாவாகவும் நியமித்து கிலாஃபத்தும் கொடுத்தார்கள்.

     ஹிஜ்ரி 1282ல் ஊர் திரும்பிய மகான் பெரிய ஷெய்குனா அவர்கள் நமதூரில் ஷாதுலிய்யா தரீக்காவை முதலில் அறிமுகம் செய்து வைத்தார்கள். தரீக்காவில் சேர்ந்த பலர் அதன் வழிப்படி அமல்கள் செய்ய ஆரம்பித்தார்கள். ஷாதுலிய்யா திக்ர் மஜ்லிஸ் ஆங்காங்கே நடைப்பெற்று வந்தன... ஒவ்வொரு ஜும் ஆ தொழுகைக்குப்பின் ஜும் ஆ பள்ளியிலேயே திக்ர் ஹல்கா நடைபெற்றது.

     தினசரி சுபுஹ் தொழுகை மற்றும் மக்ரிப் தொழுகை முடிந்த பின் திக்ர் நடைபெறுவது வழக்கம். இதை பள்ளியில் வைத்துச் செய்வதால் பின்னர் தொழவருபர்களுக்கு இடையூறாக இருக்கும் என்பதால் தனியாக தியானக் கூடம் (ஜாவியா) கட்ட முடிவு செய்தார்கள்.பெரிய ஷெய்குனா அவர்கள் அக்காலத்தில் சிறுநெய்னார் பள்ளியில் நடந்து வந்த அறபி மத்ரஸாவின் முதன்மை பேராசியராகவும், பள்ளியின் முக்கிய பொறுப்பாளராக(முத்தவல்லி)யாகவும் இருந்தார்கள்.

       ஷெய்குனா அவர்கள் பலரின் ஆலோசனைப்படி சிறுநெய்னார் பள்ளிக்கு தென்மேற்க்கிலுள்ள வெற்று நிலத்தில் ஜாவியா அமைக்க முடிவு செய்தார்கள். வேலை ஆரம்பிக்கும் போது சிலர் பொதுவான பள்ளிக்கு சொந்தமான இடத்தில் தனிப்பட்ட ஒரு தரீக்காவுக்கு இடமளிப்பது பொருத்தமாகாது என்று கோரிக்கையை முன்வைத்தார்கள். இவ்வாறு பேச்சு வார்த்தை நடந்த போது ளுஹர் நேரமாகிவிட்டதால் அனைவரும் பள்ளிக்கு தொழ போய்விட்டார்கள். தொழுது முடிந்த பின்பு அங்கு வந்த பெரியார் செனை காதர் சாஹிப் அப்பா அவர்கள் தனக்கு சொந்தமான நிலம் பள்ளிக்கு கீழ்பக்கத்திலுள்ள தெருவிற்கு நேரே இருப்பதை சுட்டிக்காட்டி அதை தானமாக தந்துவிட்டதாக வாக்களித்துச் சென்றார்கள். இதன் முழு விபரம் ஜாவியா நூற்றாண்டு மலரில் பார்க்கலாம். 

     

பயான்
ரமலான் 1432 நாள் 1: நோன்பின் மாண்புகள் - S.K.M. காஜா முஹ்ய்யதீன் ஆலிம் காஷிஃபி play
ரமலான் 1432 நாள் 2: தாலுத் அவர்களின் வரலாறு - S.K.M. காஜா முஹ்ய்யதீன் ஆலிம் காஷிஃபி play
ரமலான் 1432 நாள் 3: குரான் ஒரு அற்புதம் - S.K.M. காஜா முஹ்ய்யதீன் ஆலிம் காஷிஃபி play
ரமலான் 1432 நாள் 5: - அப்துல்லாஹ் மக்கி ஆலிம் காஷிஃபி play
ரமலான் 1432 நாள் 6: ஆயத்துல்குர்ஸி - S.K.M. காஜா முஹ்ய்யதீன் ஆலிம் காஷிஃபி play